இலங்கையில் பாரிய வீழ்ச்சியடைந்த மஞ்சள் தூளின் விலை!

இலங்கையில் பாரிய வீழ்ச்சியடைந்த மஞ்சள் தூளின் விலை!


நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7 ஆயிரம் ரூபாவிலிருந்து 4,500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.


இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு  கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.


அவ்வாறே விதை மஞ்சள் கிலோவொன்றின் விலை 1,000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெவ்வேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.