அசாத் சாலிக்கு மேலும் சிக்கல் - இன்று வெளியான நீதிமன்ற தீர்ப்பு!

அசாத் சாலிக்கு மேலும் சிக்கல் - இன்று வெளியான நீதிமன்ற தீர்ப்பு!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததையடுத்து. மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சர்ச்சைக் கருத்துத் தொடர்பிலேயே அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அசாத் சாலி தொடர்பான வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.