சீனாவின் கடன் பொறிக்குல் சிக்கிய இலங்கை, மீழுமா ? மூழ்குமா ? வருங்கால சந்ததியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது தாய் நாடா? தத்தெடுக்கும் நாடா?

சீனாவின் கடன் பொறிக்குல் சிக்கிய இலங்கை, மீழுமா ? மூழ்குமா ? வருங்கால சந்ததியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது தாய் நாடா? தத்தெடுக்கும் நாடா?

ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆரம்பிக்கப்பட்டு, நாடுகளை ஆக்கிரமிக்கும் கலாச்சாரம் ஐ. நா. வின் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்டது. சகல நாடுகளுக்குமான சுதந்திரம் உலகில் பிரகடனப்படுத்ப்ட்டது. ஆனாலும் பொருளாதாரத்துறையில் தொடர்ந்தும் உச்சத்தை எட்டி வந்த சீனா, தனது உலக ஆக்கிரமிப்பையும் உலக ஆதிக்கத்தையும்

வேறு விதமான வகையில் கைக் கொள்ள ஆரம்பித்தது.

இதற்கு சீனா தன்னிடமிருக்கும் பொருளாதாரத்தையும், வரிய நாடுகளின் வருமையையும் சில நாடுகளில் நிலவும் ஊழல்களையும், ஊழல் தலைமைகளையும் ஒரு நூற்பாமான சந்தர்ப்பமாக கைக்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் பல நாடுகளை விழுங்கிவரும் சீனா, தனது வலையில் இலங்கையையும் சிக்க வைத்துள்ளது. சீனாவின் ஆபத்தான வலையில் சிக்கும் நாடுகளின் வரிசையை ஆராய்ந்து பார்கும் போது ஊழல் தலைவித்தாடும் நாடுகளே சீனாவின் வலையில் இலகுவாக சிக்கியுள்ளன.

இதற்கு சீனா உலகைக் கவரும் நவீன வகையான உத்திகளை கையாளுகிறது. நாட்டின் முன்னேற்றம், பொருளாதார அபிவிருத்தி, வாழ்க்கை தர விருத்தி என்ற போர்வையில், இவ்வாறான நாடுகளில் கடனுதவி திட்டங்களை முன்வைக்கின்றன. இதற்கான அத்தனை முதலீடுகளையும் சீனா வழங்குவதோடு, அதற்கான தொழில்நுட்பம் மனிதவலு வேலைவாய்ப்பு போன்றவற்றையும் சீனாவே பொறுப்பெடுக்கின்றன .

இவ்வாறான ஒரு பொறிமுறையின் மூலமாக, சீனா தான் முதலிடும் பணத்தை, மனித வலு, வேலை வாய்ப்பு, தொழில்நுட்பம், போன்ற துறைகளுக்கா திரும்பவும் மீறப்பெறுகின்றன. இதனால் சீனா முதலிட்ட பணம் திரும்பவும் அவர்களிடம் சென்றடைவதோடு, அவர்களின் வேலைவாய்ப்பு தொழில்நுட்பத்திற்கான சந்தர்ப்பம் அத்தனையும் அவர்களுக்கு கிட்டுகின்றது.

இறுதியில் கடனை கட்ட முடியாதபட்சத்தில் சீனா வெளிநாடுகளில் முன்னெடுத்த இந்தத் திட்டங்களை மீண்டும் தனது நாட்டுக்காக எழுதி வாங்கி வருகின்றது . இதனால் குறிப்பிட்ட நாட்டிற்கு 100% மும் தோல்வியாகும். சீனாவிடம் இன்று கடன் பொறியில் சிக்கித் தவிக்கும் நாடுகள் இவ்வாறு தமது நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டையும் இழந்தனர். இது ஒரு நவீன வகையிலான உலக ஆக்கிரமிப்பாகும்.

இந்த வகையில் கடன் பொறியில் சிக்கிய இலங்கைக்கு சீனா பல்லாயிரம் கோடிகளை கடனாக வழங்கியுள்ளது. இந்தக் கடனை அடைக்க இலங்கை அரசு தற்போது போராடி வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று ஏனைய உலக நாடுகளின் எச்சரிக்கைகள் உள்ளன.

நாட்டின் முக்கிய வருமான சுற்றுலாத்துறை முடங்கியுள்ளதால் இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. மற்ற வருமான ஆதாரங்களும் முடங்கியுள்ளன. பலர் வேலை இழந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையால் கெடுத்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலும் மீண்டும் பெருந்தொகை கடனை வழங்கி இலங்கையை தன் கடன் பொறிக்குள் சிக்க வைத்தது.

சீனா கடந்த ஆகஸ்ட் மாதம், 6,150 கோடி ரூபாய் இலங்கை அரசுக்கு, கொரானாவுக்கு எதிரான வேலைத்திட்டம், சரிந்து வரும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் என்று சில ஒப்பந்தத்தின் கீழ் கைச்சாத்திட்டு வழங்கியது.

இலங்கை கடந்த 12 வருடங்களாக சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கி உள்ளது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, சீனா 2009 ஆம் ஆண்டு தென்பகுதியில் துரைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையை முன்வைத்தது.

பூகோல ரீதியில் இப்பகுதியானது துறைமுகத்தை அமைப்பதற்கு ஏதுவாக இல்லை என பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், இதனை அமைப்பதற்கான மொத்த செலவில் 85 சதவீதத்தை சீனா கடனாக கொடுத்தது.

20015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்ற இரண்டு வருடங்களில், நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் 50 சதவிகிதம் கடனாகவே காணப்பட்டது. இத்துறை முகத்தால் வாங்கிய கடனுக்காக வட்டியை கட்ட முடிய வில்லை. ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இதை ஆரம்பித்து வைத்த தனது பிறந்த நாள் திகதியில் இருந்து ரணில் மைத்திரி ஆட்சியின் நடுப் பகுதி பகுதி வரை, சுமார் 35 கப்பலகளே வந்து சென்றதாக தகவல்கள் பதிவாகின. இதனால், இந்த தலை வழியில் இருந்து விடுபட ரணில் மைத்ரி அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு எழுதியது.

குத்தகை ஒப்பந்தம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70% விகிதத்தை சீனாவும், 30% விகிதத்தை இலங்கையும் வைத்திருக்கும் என்றும் சீனா கூறியது. இதற்கு பதிலளிக்க இலங்கையில் பொருளாதார பலம் இல்லை. இதனால் சீனாவின் நிபந்தனையை ஏற்றது இலங்கை. இதைத் தொடர்ந்து இலங்கையின் தென் பகுதியை நோக்கி சீனா வைத்த குறி தவரவில்லை .

இதில் சீனாவின் வேலை வாய்ப்பு, தொழில்நுட்பம் , கட்டிடப் பொருள் அத்தனைக்கும் சீனா வழங்கிய கடன் , சீனாவினால் திரும்பி பெறப்பட்டது.

மேலும் இதில் கடனுக்கான

சலுகை அடிப்படையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீனா எழுதி வாங்கியது.

இலங்கை கடனுக்கான வட்டியும் கட்டி சொந்த நிலத்தையும் இழந்து தனது சொத்தையும் இழந்தது.

அதைத் தொடர்ந்து, 2014 இல், அப்போதைய இலங்கை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் சீன பிரதமர் ஜி ஜின் பிங் ஆகியோர் கொழும்பில் மிகபெரிய பொருளாதார நகரத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அடுத்த ஆண்டில் மஹிந்த ராஜபக்ச அரசு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மைத்திரிபால ரனில் கூட்டாட்சி அரங்கேற்றியது மைத்திரிபால சிறிசேன ஆட்சியைப் பிடித்தார். இதற்கிடையில், இலங்கையின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து.

சீனாவின் அடுத்த இலக்கு தலைநகர் கொழும்பு. கொழும்பில் அமையப்போகும் துறைமுக நகரம் கட்டுமானம் 2015 இல் தொடங்கியது, ஆசிட்சி மாற்றத்தினால் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் சீன எதிர்ப்பு கொள்கை சீனாவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றினால் கட்டுமான பணிகளில் சிறிது காலம் தடைப்பட்டாலும், பதவிக்கு வந்த ரணில் மைத்திரி அரசினால் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறிய மாற்றத்தின் காரணமாக தாமதம் ஏற்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மீண்டும் 2020 ல் மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்று பிரதமரானார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானார். இதைத் தொடர்ந்து, ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்தினார்.

2020 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் 80 சதவீதமாக கடனாக காணப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, கொழும்பு துறைமுக நகரத்தை 99 வருட குத்தகைக்கு முழு அதிகாரத்துடன் கோரி நின்றது.

இதற்கிடையில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா தாக்கத்தால் இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. எனவே வேறு வழியில்லாமல் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்தது.

கொழும்பு துறைமுக நகரத்தின் முழு அதிகாரத்தையும் சீனாவுக்கு வழங்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார திருத்தத்தை சீனாவின் அழுத்த்தின் படி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமுல்படுத்தினார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில், சட்ட மூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 149 பேரின் ஆதரவுடன் நிறைவேறியது . இத்திட்டத்தினால் இலங்கையின் தலைநகர் கொழும்பை நோக்கி சீனா வைத்த கனவும் நிறைவேறியது .

இந்த விடயத்தில் இலங்கையின் ஆட்சிமாற்ற விடயங்களினால் தனது திட்டங்களுக்கான தடைகளினாலும், தாமதங்களாலும் கட்டுப்பாடுகளினாலும், இலங்கையில் பாடம் படித்த சீனா, தனது நிபந்தனைகளுக்கு ஏற்றவாறும், தனது முதலீடுகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சட்டங்களை தனக்கு சார்பாக திருத்தப்பட இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுத்தது. இதன் படி சீனா தலை நகர் கொழும்பை நோக்கி வைத்த கூறியும் தவறாமல் இலக்கை எட்டியது.

இவ்வாறான சூழலில், சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம் தனது வலையில் நாட்டை சிக்க வைத்துள்ளதாக சர்வதேசமட்டத்திலான குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் உள்ளன.

பொதுவாக, உலக வங்கிகள்

இன்னும் சர்வதேச பொது நிறுவணங்கள் போன்ற இடங்களில் இருந்து ஒரு நாட்டு கடன் வாங்கும் பொழுது கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதேவேலை இன்னொரு நட்டில் இருந்து ஒரு நாடு கடன் வாங்கும்போது அதற்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும். இந்த வகையில் சீனா இலங்கைக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

சீனா குறுகிய காலத்தின் அடிப்படையிலேயே கடனை திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டால் மாதிரமே கடனை வழங்கும். அவ்வாறு செய்யத் தவறினால், நாட்டின் ஒரு பகுதியை சீனா கொழும்பு துறைமுக நகரத்துக்கான ஒப்பந்தம் போன்ற, பல்வேறு ஒப்பந்தங்களில் இலங்கை கட்டாயப்படுத்தப்படும். அது இலங்கை நாட்டை வேறு ஒரு நாட்டிற்கு எழுதுவதைப் போன்றதாகும்.

சீனா மீளளிக்க முடியாத கடன்களை வழங்கி உலகை ஆக்கிரமிப்பதில் பாரிய வெற்றியை கண்டு வருகின்றது. இதுவே சீனாவின் திட்டம்.

பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மற்றும் அங்கோலா உற்பட பல ஆபிரிக்கா நாடுகளிலும் சீனா இதே போன்ற முதலீடுகளைச் செய்து தனது திட்டத்தை வெற்றியாக நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் இவ்வாறான திட்டத்தின மூலம் ஆசிய நாடுகளுக்குல் முதலில் தான் ஆதிக்கத்தை நிலை நாட்டி உலகளவிலான ஆதிதக்கத்தை அதிகரித்து அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுவதாகும்.

அவ்வாறு செய்வதன் மூலம், சீனா தனது உலக ஆக்கிரமிப்பு திட்டத்தை வெற்றியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

சீனா ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் பங்களாதேஷ் மியன்மார் உட்பட தனது முதலீடுகளின் மூலம் ஆக்கிரமித்தாலும் ஆசியா கண்டத்தில் இலங்கை சீனாவுக்கு காலூன்ற ஏராளமான வாய்ப்புகளை வழியே சென்று வழங்கிவருகின்றது. அப்போதான சந்தர்ப்பங்களில் சீனா தன் நிலைப்பாட்டினை இலங்கையில் உறுதி செய்து கொள்கின்றது.

நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் ஏற்கனவே சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை மீளுமா? மூழ்குமா,

அடுத்த தசாப்தத்தின் நாட்டின் தலை விதியையும், நாட்டு எதிர்கால சந்ததியின் தலை விதியையும் தீர்மானிப்பது தாய் நாடா ? தத்தெடுக்கும் நாடா ? தீர்மானம் நம் தலைவர்களின் கையில்.

(பேருவளை ஹில்மி)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.