பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று (28) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை பெண்ணுக்கு சாதகமான முறையில் முடித்துக் கொடுப்பதற்காக குறித்த பெண்ணிடம் இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், புத்தளத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளனர்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.