தனது பெயரை மாற்றி அறிவிப்பொன்றை வெளியிட்ட ஃபேஸ்புக் நிறுவனம்!

தனது பெயரை மாற்றி அறிவிப்பொன்றை வெளியிட்ட ஃபேஸ்புக் நிறுவனம்!


ஃபேஸ்புக் நிறுவனமானது மறுபெயரிடலின் முதற்கட்டமாக அதன் பெயரை “மெட்டா” (Meta) என மாற்றியுள்ளது.

அதன் வருடாந்திர மாநாடு ஒன்றில் இந்த மாற்றத்தை அறிவித்த நிறுவனம், இப்போது மேலும் பலவற்றை உள்ளடக்கியவாறு செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது ஒரு மெட்டாவேர்ஸிற்கான திட்டங்களையும் வெளிப்படுத்தியது - மக்கள் இந்த ஆண்லைன் உலகத்தில் மெய்நிகராக 
(Virtual) விளையாடவும், வேலை செய்யவும் மற்றும் தொடர்பு கொள்ளவும், பெரும்பாலும் VR ஹெட்செட்களைப் பயன்படுத்தவும் வழிவகுக்கும்.

முன்னாள் ஊழியர் ஒருவரினால் ஃபேஸ்புக் பற்றிய தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்களை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.