மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என பெயர் வைத்த பெற்றோர்! காரணம் இதுதானாம்!

மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என பெயர் வைத்த பெற்றோர்! காரணம் இதுதானாம்!


இந்தோனேசியாவில் தனது மகனுக்கு  'ABCDEF GHIJK Zuzu'என பெயரிட்டுள்ளனர் ஒரு பெற்றோர். 

12 வயதான இச் சிறுவன் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காகச் சென்றபோது அவரது பெயரைக் கேட்டு சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சிறுவனின் தந்தைக்கு குறுக்கெழுத்துக்கள் விளையாட்டு (crosswords) பிடிக்கும் என்பதால் அவனுக்கு 'ABCDEF GHIJK Zuzu' என பெயர் வைத்தாராம். அவரது பெயரில் உள்ள 'Zuzu' என்பது அவரது பெற்றோரின் பெயர்களான Zuhro மற்றும் Zulfahmi என்பதிலிருந்து முதல் 2 எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வைத்துள்ளனர்.

தடுப்பூசி மையத்தில் இருந்த சுகாதார அதிகாரிகள் முதலில் சிறுவனின் பெயரைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐடி கார்டை பார்த்தும் அவர்கள் நம்பவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதையடுத்து சிறுவனின் உண்மையான பெயர் அதுதான் என்றும், பெயருக்கான காரணத்தையும் அவனது பெற்றோர் சுகாதார அதிகாரிகளிடம் விளக்கியுள்ளனர். சிறுவனுக்கு 2 சகோதரர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் பெயர் அம்மர், அட்டூர். அவர்களுக்கும் தனித்துவமான பெயரைத்தான் சூட்ட விரும்பியிருக்கிறார் அவரது தந்தை. 

ஏற்கெனவே இரண்டாவது மகனுக்கு NOPQ RSTUV என்ற பெயரையும், மூன்றாவது மகனுக்கு XYZ என்ற பெயரையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அந்த முடிவை மாற்றி தனது மற்ற 2 மகன்களுக்கு வேறு பெயரை வைத்துவிட்டாராம். 

அந்த 12 வயது சிறுவனை அவனது பெயரின் காரணமாக பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக பலமுறை தனது தந்தை சுல்ஃபாமியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெயரின் காரணமாக உலகுக்கே தற்போது அந்த சிறுவனைத் தெரிந்திருக்கிறது. இதனால் அவர் செம்ம குஷியாக இருக்கிறாராம்.

தனது நண்பர்கள் கேலி செய்யும் போதெல்லாம் அதுகுறித்து தனது பெற்றோர்களிடம் முறையிடுவாராம் ABCDEF GHIJK Zuzu. ஆனால் அவனது தந்தை, உனது பெயருக்கு அர்த்தம் இருக்கிறது, அதில் உன் தாய் தந்தை ஆகிய இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துக்களும் உள்ளன என சமாதானம் செய்துள்ளனர்.

தனது மகன் ABCDEF GHIJK Zuzuக்கு இவ்வளவு நாட்கள் உதவிய ஆசிரியர்களுக்கு நன்றி என்றும் அவனது தந்தை சுல்ஃபாமி தெரிவித்துள்ளார். 

இதே போன்று பிலிப்பைன்சிலும் தங்களது குழந்தைக்கு 'Ghlynnyl Hylhyr Yzzyghyl' என பெயரிட்டுள்ளனர் ஒரு பெற்றோர். 

ஆனால் இதுகுறித்து நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை செய்து வருகின்றனர். அது கூகுளால் உருவாக்கப்படும் ஆட்டோ ஜெனெரேட்டேட் பாஸ்வேர்ட்  (Auto-Generated Password) போன்று உள்ளதாக கூறுகின்றனர். பெயர் என்றாலும் ‘ஒரு நியாயம் வேண்டாமா’ என பதிவிட்டு வருகின்றனர்.

- சர்வதேச ஊடகம்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.