கம்பளை வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மேலதிக தகவல்!

கம்பளை வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மேலதிக தகவல்!


கொத்மலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தபோது  காணாமல்போயிருந்த நிலையில் 51 நாட்களின் பின்னா் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.


பூண்டுலோயா நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 56 வயதான சுப்பையா இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து இவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


நெஞ்சுவலி ஏற்பட்டதால் 1990 அம்பியுலன்ஸ் சேவை ஊடாக கடந்த மாதம் 08 ஆம் திகதி காலை கம்பளை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உறவினர்கள் வீடு திரும்பிய நிலையில், சார்ஜன்ட் காணாமற்போனதாக குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இதுதொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-தமிழன்


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் - கம்பளையில் சம்பவம்!

https://www.yazhnews.com/2021/09/blog-post_524.html


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.