நாட்டில் வாகன விலைகள் தொடர்பாக வெளியான செய்தி!

நாட்டில் வாகன விலைகள் தொடர்பாக வெளியான செய்தி!


உள்நாட்டு சந்தையில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைத் தெரிவித்துள்ளார்.


பாதீட்டின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, கட்டுப்படுத்த முடியாத வகையில் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சில வாகனங்களின் உதிரிபாகங்கள், இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களினாலே அதிக விலைக்கு விநியோகிக்கப்படுகின்றன.


இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.