துபாய்க்கு அனுப்பப்பட்டது உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல்!

துபாய்க்கு அனுப்பப்பட்டது உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல்!


இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல் டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - துபாயில் நடைபெறும் சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சியில் குறித்த நட்சத்திர நீலக்கல் காட்சிப்படுத்தப்பட உள்ளமைக்காகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி, கிணறு தோன்றிக் கொண்டிருந்தபோது இந்த நட்சத்திர நீலக்கல் கண்டு பிடிக்கப்பட்டது.


சுமார் 510 கிலோ கிராம் எடையுடைய இக்கல் 100 மில்லியன் டொலர் பெறுமதியுடையது என்று கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எம்.மனோசித்ரா


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.