முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட இலங்கை பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் கட்டார் நாட்டு அரசு தளர்த்தவுள்ளது.
இந்தியா மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் கட்டார் அதிகாரிகளால் விதிவிலக்கான சிவப்பு நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
பொது சுகாதார அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விதிவிலக்கழிக்கப்பட்ட சிவப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 06 முதல் இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களும் இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் கட்டாருக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருக்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் கட்டார் வந்து 36 மணி நேரத்துக்குள் பயணிகள் பிசிஆர் பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றை கட்டாருக்கு வெளியே ஏற்றிக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஹோட்டலில் பிறபொருள் எதிரி பரிசோதனை (Serology Antibody test) நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு...https://thepeninsulaqatar.com/article/03/10/2021/Qatar-Health-Ministry-adds-more-countries-to-exceptional-red-list