எதிர்வரும் 06ஆம் திகதி ஆசிரியர் தினத்தன்று, நாடளாவிய ரீதியில் 312 வலயக்கல்வி காரியாலயங்களுக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேதன பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாறு கோரியும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.