சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க மஹிந்த முடிவு?

சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க மஹிந்த முடிவு?


சமூக ஊடக பாவனையில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


கடந்த சனிக்கிழமையன்று (16) தன் இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் டிஜிட்டல் திரையைப் பார்வையிடுவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன் காரணமாக பதிவுகளுக்கு பதிலளிக்க முடியாதுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


தன் கண்ணில் மேற்கொண்டுள்ள சத்திரசிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.