அன்பான என் மாணவச் செல்வங்களே,
நாம் தற்போது கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கின்றோம், இது உங்களை பழிவாங்கும் நோக்கம் அல்ல.
ஈவிரக்கமற்ற வகையில் உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்கு விலை பேசும் போராட்டம் அல்ல.
நீங்கள் அத்தனை பேரும் எங்கள் மாணவச் செல்வங்கள் மட்டுமல்ல. நாம் பெறாத பிள்ளைகளும் கூட, நீங்கள் அத்தனை பேரும் இந்த நாட்டின் வருங்கால சொத்துக்கள். நாம் நாடின் தலைவர்கள். விலை மதிக்க முடியாத முத்துக்கள்,
அதை நாம் அறியாமல் இல்லை.
நாம் செய்யும் இந்த புனித தொழில் மகத்தானது. இதில் எமது லாபம் , எமது நலன் என்பதை விட உங்களின் எதிர்காலமே எமது குறிக்கேள் என்பதை நீங்கள் யாரும் மறந்து விடக்கூடாது.
எமது பாசம் நிறைந்த மாணவர்களே, நாம் காலையில் எழுந்து எமது சொந்தப் பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும், உங்களது நலன் கருதி நீங்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளவிருக்கும் அவ் அப்போதான பரீட்சைகளை நினைத்து, உங்கள் எதிர்காலத்தை நினைத்து எம் உள்ளிருக்கும் ஆயிரம் எமது பிரச்சினைகளை மறந்து பாடசாலைக்கு ஓடோடி வருகிறோம்.
எமது சேவைக்கான ஊதியத்தை அரசாங்கம் வழங்கினாலும், அது எமது வாழ்க்கையை நடத்திச் செல்ல போதுமானதாக இல்லை என்பது உலகறிந்த உண்மை.
இது சேவைக்கான ஒரு சிறு கொடுப்பனவே தவிர, இது நாம் செய்யும் தூய்மையான, தியாகத்துக்கான கொடுப்பனவாக இல்லை.
இருந்தாலும் இவை பற்றி ஒருபோதும் நாம் சிந்தித்ததில்லை.
இலங்கையின் ஆசிரிய சேவை வரலாற்றில் இதுபோன்ற ஒரு போராட்டத்தில் இந்த ஆசிரியர் சமூகம் குதித்தது கிடையாது. சிலர் எம்மை அரசியல் லாபங்களுக்காக உங்களின் எதிரிகளாக சித்ததிக்க முயன்றாலும் உண்மை அதுவல்ல.
வாழ்நாள் முழுதும் சிறு ஊதியத்துக்காக உழைத்து வாழ்க்கையில் கஷ்டப்படும் எமக்கு, இறுதியில் நிம்மதியைத் தருவது உங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்களாகும் .
நீங்கள் நன்றாக படித்து வைத்திய துறைகளிலும் இன்னோரன்ன துறைகளிலும் உயர் பதவிகளை வகிக்கும்போது
என்னிடம் படித்த மாணவன் என நாம் சொல்லிக் கொள்ளும் பெருமையே எமது வயோதிப காலத்தில் எமது மனதில் நிம்மதியை தருகின்றது. இதன் திருப்தியிலேயே நாம் இறுதி மூச்சை நிம்மதியாக விடுகிறோம்.
ஒரு விஞ்ஞான ஆசிரியையாக உங்களுக்கு பாடம் கற்பிக்கும் எனது இறுதி ஆசை, நான் கற்பிகத்த ஒரு மாணவன் வைத்தியராகி அவனிடம் ஒரு வேளையாவது வயதான காலத்தில் எனது நோய்க்கு வைத்தியம் பார்த்துவிட்டு இந்த உலகிலிருந்து எனது இறுதி மூச்சை சந்தோஷமாக விட வேண்டும் என்பதாகும்.
என் கல்விக் கண்களை திறந்து விட்ட அசான்களுக்காக இன்றும் எனது வணக்கங்களின் போதும் பிரார்த்திக்கிறேன்.
இது போன்ற பிராத்தனை என் சாவுக்கு பின்பும் எனக்காகவும் வந்து சேரவேண்டும் என்பது எனது பிராத்தனை.
ஆனால் இந்த அரசாங்கம் இறுதியாக எமக்கு நிம்மதி அளிக்கும் இறுதி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கின்றது . மேலும் உங்களது நல்ல ஒளிமயமான வாழ்க்கைக்கும் இலவச கல்விக்கும் இறுதிச் சங்கை ஊதி , இறுதி சாவுமணியை அடித்து, இலவச கல்விக்கு மரண ஊர்வலத்தை நடத்தி சமாதி கட்டுவதே இவர்களின் நோக்கம்.
வெளிநாட்டுக்காரர்களிடம் உங்களது எதிர்கால கல்வியையும் விற்று, இந்த நாட்டின் எதிர்கால சொத்துக்களாகிய உங்களையும் அந்நிய நாட்டுக்காரனிடம் கை கட்டி வேலை செய்யும் எதிர்காலத்திற்கு இவர்கள் அத்திவாரம் இட்டு வருகின்றனர்.
இவர்களின் நடவடிக்கை இன்னும் இரு தசாப்ங்களில்
தலை வழிக்கா ஒரு பனடோல் குளிசைக்கு வெளிநாட்டுக் காரனிடம் கை நீட்டி நிற்க வேண்டி வரும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறான கேவலமான நிலமை எமது தாய் மண்ணில் எமது மைந்தர்களுக்கு ஏற்படக்கூடாது . இந்த இலங்கைத் தாயின் கெளரவமும் மகிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே தான் நாம் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கின்றோம்.
மாறாக இவர்கள் எம் மீது குற்றம் சுமத்தும் சம்பள அதிகரிப்பு மாத்திரமல்ல, இந்தப் போராட்டமானது இந்த இலங்கை தாய் மண்ணின் உங்களைப் போன்ற எதிர்கால செல்வங்களின் எழுச்சிக்கான போராட்டமாகும்.
ஆகவே எமது நிபந்தனைக்கு ஏற்புடைய தீர்வு காணப்பட்டு உங்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை போராடுவதே எமது முடிவாகும்.
எனவே இவர்களால் உங்களது எதிர்கால கல்விக்கான உத்தரவாதம் எந்த நிமிடம் வழங்கப்படுகிறதோ, அந்த நிமிடம் வரை உங்களுக்கான எமது போராட்டம் தொடரும்.
அன்பான மாணவச் செல்வங்களே எமது நாட்டின் சகலருக்குமான இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலமாக எமது நாட்டின் மூலை முடுக்குகளில் வாழும் உங்களைப் போன்ற வசதியற்ற, உங்களின் உடன் பிறவா வரிய சகோதரர்களின் வாழ்க்கையும் எழுச்சி அடைய வேண்டும் என்பது எமது போராட்டத்தின் குறிக்கோளாகும்.
ஆகவே உங்களின் சுபிட்சமான வாழ்க்கைக்காண எமது போராட்டத்தின் வெற்றியோடு, காலையில் கல்வியின் தெய்வங்களாக எம்மை வழிபட்டு, எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கி, கல்வியை தொடங்கும் நாள் வெகு விரைவில் வர வேண்டும் என வேண்டி, உங்களை வந்து சந்திக்கும் வரை கவலையுடன் விடைபெறுகிறேன் உங்கள் அன்பின் ஆசிரியை.
மிஸ். பல்லியகுருகே
தமிழில் பேருவலை ஹில்மி