எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்பதிகள் காணப்பட்டால் என்னிடத்தில் தெளிவுபடுத்தல்களை பெற்றிருக்க வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக அடிப்படை உறுப்பினரான என்னை கட்சியிலிருந்து விலக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி முறையற்ற வகையில் எனது விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவதற்கும் தயராக உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டத்தின் ஆதரவாக வாக்களித்தமை உட்பட கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டயனா கமகேயை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்தில் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆர்.ராம்