இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை நடாத்தும் முப்பெரும் விழா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை நடாத்தும் முப்பெரும் விழா!

SLBC Tamil and Muslim Service

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா நாளை (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகம் - 06 இல் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொள்கிறார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கரின் வழிகாட்டலில்; பணிப்பாளர் குழுவினருடன் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலிசப்ரி, கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர்களான டாக்டர் அக்ரஹார கஸ்ஸபா நாயக்க தேரர், சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானா அல் - காதிரி, பாதர் சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோரின் பங்களிப்பில் சர்வ மத நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஆரம்பிக்கப்பட்டு 71 ஆண்டுகள் நிறைவையும் மற்றும் முஸ்லிம் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டு பூர்த்தியான வைர விழாவையும் கொண்டாடும் இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக, பொதுஜன பெரமுன கொழும்பு வடக்கின் இணைப்பாளர் ராஜு பாஸ்கரன், பிரதமரின் மதவிவகாரங்களுக்கான இணைப்பாளர் ஏ. உமா மகேஸ்வரன், ஹஜ் குழுவின் தலைவர் அக்ரம் உவைஸ், முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர்களான மௌலவி பஸ்லுர் ரஹ்மான், எம். முஸ்லிம் சலாஹுதீன், அப்ஸல் மரிக்கார், முன்னாள் முஸ்லிம் சேவைப்பணிப்பாளரும் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினருமான எம். இஸட், அஹ்மத் முனவ்வர், முன்னாள் வர்த்த சேவையின் கட்டுப்பாட்டாளர் பீ.எச். அப்துல் ஹமீட், முன்னாள் தமிழ் சேவைப் பணிப்பாளர் எஸ். ஜீவரட்ணகுமார், முன்னாள் வர்த்தக சேவைப் பணிப்பாளர் ஆர். சந்திரமோகன் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இந்நிகழ்வுகள் அனைத்தும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 102.1 மற்றும் 102.3 அலைவரிசையில் நேரடி அஞ்சல் செய்யப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.