நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மவ்லிதுர் றஸுல் ஓதுவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி!

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மவ்லிதுர் றஸுல் ஓதுவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி!


எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி எம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸெய்யிதினா மௌலானா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை ஹயாதாக்குமுகமாக சகல பள்ளிவாசல்களிலும் கோவிட்-19 சுகாதார வழிகாட்டலை பின்பற்றி மவ்லிதுர் றஸுல் 50 நபர்களுக்கு ஓதுவதற்கு சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அஸேல குணவர்தன அவர்கள் எனது வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியுள்ளார்.


இன்ஷா அல்லாஹ் இதற்கான வழிகாட்டலை இலங்கை வக்ஃப் சபை வெகு விரைவில் அறிவிக்கும் வக்ஃப் சபையின் வழிகாட்டலை முற்றுமுழுதாக பின்பற்றி இந்த நன்நாளை ஹயாத்தாக்குமாரு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.


இப்படிக்கு,

அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.