மோட்டார் வாகன திணைக்களத்தின் தன்னியக்க சேவை அறிமுகம்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் தன்னியக்க சேவை அறிமுகம்!


மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.


இன்றைய தினம் (29) தொடக்கம் இருந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அதேபோல், இதற்கு முன்னர் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 011-2677877 என்ற தொலைப்பேசி இலக்கம் இன்றைய தினத்தில் இருந்து பயன்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.