நபரொருவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார்!

நபரொருவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார்!


தெமட்டகொடை, கெடவலமுல்ல பிரதேசத்தில் உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தங்கியிருந்த ஊழியரொருவர் மீது தெமட்டகொடை பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் மேற்கொள்ளும் சிசிடிவி காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு இலக்கான நபர் பணியாற்றிய உணவுத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தனது வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணியின் முன்னாள் உரிமையாளரின் அறிவிப்பின் பேரில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த குறித்த வர்த்தகர், தான் குறித்த காணியை 2011ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாவுக்கு வாங்கியதாகவும், அதன்பின்னர் குறித்த காணியை விற்பனை செய்த நபர், தெமட்டகொடை பொலிஸாருடன் இணைந்து தனக்கு தொடர்ந்தும் இடையூறு செய்து வந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


தெமட்டகொடை தலைமை காவல்நிலையத்தின் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராகத் தரமுயர்த்தப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, இந்தச் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாகக் குறித்த வர்த்தகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


தான் எதிர்நோக்கும் பிரச்சினைகுறித்து தொடர்ந்தும் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்தபோதிலும் அவர்கள் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குறித்த வர்த்தகர் தெரிவித்தார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.