விகாரையினுள் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு - பல நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டதாக சந்தேம் - தற்போதும் செயலில் இருப்பதாகவும் தெரிவிப்பு!

விகாரையினுள் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு - பல நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டதாக சந்தேம் - தற்போதும் செயலில் இருப்பதாகவும் தெரிவிப்பு!

கொழும்பு பெல்லன்வில ராஜ மகா விகாரையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை விகாரை வளாகத்தை சுத்தம் செய்த நபரால் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அழுக்கு படிந்திருந்ததாகவும், இது சில காலத்திற்கு முன்பு விகாரையினுள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைக்குண்டானது வெளியில் இருந்து விகாரை வளாகத்திற்குள் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக விகாரையினுள் இருந்தபோதிலும், கைக்குண்டு இன்னும் செயலில் இருப்பதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.