அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹைலண்ட் 400 கிராம் பால்மாவின் விலை 470 ரூபாவாகவும், ஒரு கிலோ ஹைலண்ட் பால்மாவின் விலை 1,170 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், பெல்வத்த நிறுவனம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
380 ரூபாவாக இருந்த குறித்த நிறுவனத்தின் 400 கிராம் பால்மா பொதியின் விலை, தற்போது 460 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொலர் தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாவினால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.