ஆப்கான் - கந்தகார் பகுதியில் உள்ள இமாம் பர்கா ஷிஆ பள்ளிவாசல் அருகே இன்று (15) பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடினர். இதை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை எந்த அமைப்பும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்புபேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.