அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள கர்தினால் மற்றும் எல்லே குணவன்ச தேரர்!

அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள கர்தினால் மற்றும் எல்லே குணவன்ச தேரர்!


கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 செப்டம்பர் 06 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.


அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.