கொழும்பில் இன்று (05) அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கஹதுடுவ, ரிலாவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த பெண் பாதுகாப்பற்ற முறையில் வீதியை கடக்க முயலும்போது வேகமாக வந்த பஸ் வண்டி ஒன்றில் மோதுண்டுள்ளார்.
அந்த பஸ் வண்டி நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து என தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மஹரகம கண் வைத்தியசாலைக்கு சென்ற போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.