இயற்கை பசளை விவகாரம்; சீன இலங்கை உறவில் விரிசல்?

இயற்கை பசளை விவகாரம்; சீன இலங்கை உறவில் விரிசல்?


சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த இயற்கை பசளை தொகையை நிராகரித்ததன் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புக்கு தடையேற்படலாம் என கூறி, இலங்கைக்கான சீனத் தூதுவர், கமத்தொழில் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.


பசளை தொகையை நிராகரித்தமை தொடர்பில் பாதிப்புகள் ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியும், இவ்வாறான நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கும்இடையிலான நட்புறவில் உண்டாகும் பிரச்சினைகள் குறித்தும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை சிதைக்காத வகையில் செயற்படுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனத் தூதரகத்தினால் அனுப்பி வைபக்கப்பட்டுள்ள இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த பசளையின் மாதிரிகளை பரிசோதித்த பின்னர் நிராகரிக்க ஏதுவான உடனடியான காரணங்கள் தொடர்பில் சீனத் தூதரகத்திற்கு விளக்கப்பட்டுள்ளது.


எனினும் சீன நிறுவனத்திடம் இருந்து மற்றுமொரு பசளை மாதிரி வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்த கமத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த நிறுவனத்திடம் இருந்து ஏற்கனவே வரவழைக்கப்பட்ட இரண்டு பசளை மாதிரிகளை பரிசோதித்த பின்னர், அவை உழவுக்கு பயன்படுத்த தகுதியற்றவை என உறுதிப்படுத்தப்பட்டது.


அவை உயிரணுக்கள் அழிக்கப்படாமலும் நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் அடங்கி இருந்தமையுமே இதற்கு காரணம் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.