பிரபல பாடசாலையில் AL மற்றும் OL மாணவர்களை அழைத்து கல்வி நடவடிக்கை - சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!

பிரபல பாடசாலையில் AL மற்றும் OL மாணவர்களை அழைத்து கல்வி நடவடிக்கை - சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் அன்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடந்த இன்று (25) பாடசாலையின் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

சுமார் சாதாரண தரம் பயிலும் 40 மாணவர்கள் மற்றும் உயர்தரம் பயிலும் 15 மாணவர்களை அதிபர் பாடசாலைக்கு வரவழைத்து கற்பித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக 119 அவசர எண்ணிற்கு கிடைத்த புகாரை அடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று அதிபரை எச்சரித்து சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து பாடசாலை அதிபர் திரு.ராதாகிருஷ்ணனிடம் நாம் வினவிய போது, ​​பாடசாலையின் உயர் தரம் மாணவர்களை பாடசாலைக்கு வரவழைத்து தடுப்பூசி குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்ததாக, ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சாதாரண தர மாணவர்களினால் அழைத்து அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வருகை தந்த மாணவர்களுக்கு தனது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.