8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி!


ICC T20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.


அதன்படி, இன்று (22) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 08 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.


அதன்ப்டி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.


அவ்வணி சார்பில் அதிகபட்சமாக Colin Ackermann 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏனைய வீரர்கள் அனைவரும் 10ற்கும் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்து வௌியேறினர்.


அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.


மஹீஸ் தீக்‌ஷன ஒரு ஓவர்களை வீசி 03 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


இதற்கமைய, 45 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்..


அதன்படி, முதற்சுற்று போட்டிகளில் இலங்கை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.