ஆப்கான் அணியினை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி!

ஆப்கான் அணியினை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி!

ஐசிசி t20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் மொஹமட் நபி மற்றும் குலாப்தின் நய்ப் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இமாட் வசீம் இரு விக்கட்டுக்களையும், அஃப்ரிடி, ரவூப், ஷதாப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டிகை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்று  வெற்றிய தனதாக்கிக் கொண்டது.

12 பந்துகளுக்கு 24 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் ஆஸிஃப் அலி 19 ஆவது ஓவரின் 4 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியினை வெற்றி பெறச் செய்தார்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணித்தலைவர் பாபர் அஸாம் 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான் 14 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை வீழ்த்தி இருந்தார். அதே நேரம் ரஷீத் கான் 26 ஓட்டங்களுக்கு இரு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இப்போட்டி டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 3 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

அதன் அடிப்படையில் இது வரை மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற பங்காலாதேஷ் அணி அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

நாளை இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாஹ் மைதானத்தில் மாலை 3:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.