இலங்கை மத்திய வங்கி நேற்று மாத்திரம் சுமார் 20 பில்லியன் ரூபாவை அச்சிட்டிருப்பதாக மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து இன்று (16) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
பணநோட்டுக் கடதாசிகளை அச்சிடும் வெறும் இயந்திரமாக மட்டும் மத்திய வங்கி மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாத்திரம் 19.63 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டிருப்பதோடு ஜனவரி மாதம் தொடக்கம் நேற்றுவரை இந்த அரசாங்கத்தினால் 138,768 கோடி ரூபாவுக்கு நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை 17,804 கோடி ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.