ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இது பற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.