மேலுமொரு கொரோனா வைரஸ் அலை - இலங்கை மருத்துவ சங்கம் முன்வைத்த 04 முன்மொழிவுகள்!

மேலுமொரு கொரோனா வைரஸ் அலை - இலங்கை மருத்துவ சங்கம் முன்வைத்த 04 முன்மொழிவுகள்!

இலங்கையில் கொரோனா வைரசின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக 04 அம்ச முன்மொழிவை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) முன்வைத்துள்ளது.

ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக சடுதியாக இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை வியாபிக்கும் என்பதை நிரூபிப்பதாக சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இப்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியது.

இலங்கையில் கொரோனா வைரஸின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக SLMA வழங்கிய 04 முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு. 
  1. கண்காணிப்பு மூலம் தற்போதைய ஒழுங்குமுறையை மேலும் கடுமையாக அமுல்படுத்தல்.
  2. நாட்டின் முன்னுரிமை வழங்கப்பட்டவர்களுக்கு கொரோனா மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் வழங்குதல். 
  3. தொற்று அதிகளவில் பரவக்கூடிய நிலைமைகள் மற்றும் நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தல். 
  4. பரிசோதனைகள் மூலம் உயர் மட்ட கண்காணிப்புகளை மேற்கொள்ளல். 
(யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.