Xiaomi உட்பட சீன மொபைல் போன்களை கொள்வனவு செய்வோருக்கு சிவப்பு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Xiaomi உட்பட சீன மொபைல் போன்களை கொள்வனவு செய்வோருக்கு சிவப்பு எச்சரிக்கை!

சீன மொபைல் போன்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிதுவேனியா மக்களுக்கு லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

அதன்படி, அவர்கள் தற்போது பயன்படுத்தும் சீன போன்களை நிராகரிக்குமாறு நுகர்வோருக்கு தெரிவித்துள்ளனர்.  

சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 ஜி மொபைல் போன்களை சோதனை செய்த பின்னர் சீனாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

அறிக்கையின்படி, Xiaomi Mi 10T 5G  போன்களின் மென்பொருள் அமைப்பு திறன் ஐரோப்பிய ஒன்றியப் பகுதிக்கு முடக்கப்பட்டுள்ளது, ஆனால் எந்த நேரத்திலும் அதை தொலைவிலிருந்து செயல்படுத்த முடியும்.  

Xiaomi தனது போன் மாடலில் தணிக்கை கருவியையும் (censorship tools) உருவாக்கியுள்ளது, மேலும் Huawei மொபைல் போன் மாடலில் பாதுகாப்பு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 அதன்படி, சீன மொபைல் போன்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.