ஜிப்சீஸ் புகழ் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்!!

ஜிப்சீஸ் புகழ் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்!!ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும் அதன் பிரதான பாடகருமான சுனில் பெரேரா நேற்று பிற்பகல் திடீரென சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

1952 செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்த அவருக்கு மரணிக்கும் போது 68 வயதாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்த நிலையில், நியூமோனியா நிலை உக்கிரமடைந்த நிலையில் அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு காலமானார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.