ஒக்டோபர் மூன்றாம் வாரத்தில் இது தெரிய வரும் மக்களே!

ஒக்டோபர் மூன்றாம் வாரத்தில் இது தெரிய வரும் மக்களே!


அரசாங்கம் 20-30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இதனால், வைரஸ் பரவலில் ஏற்பட்டுள்ள குறைவு, கடுமையான நோய் மற்றும் இறப்புகளில் வீழ்ச்சி போன்ற தடுப்பூசி இயக்கத்தின் முழு விளைவுகளும் ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தெரியவரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது விரைவில் முடிக்கப்படும். தற்போது 20 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளோம்.

அவர்கள் ஒரு மாதத்தில் இரண்டாவது மருந்தைப் பெறுவார்கள். நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றவுடன் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் இதற்கான முடிவுகள் தெளிவாகத் தெரியும் என்று அவர் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வோறு நோய்களால் பாதிக்கப்பட்ட சிலர், கொரோனா தடுப்பூசிகளை பெற தயங்குகிறார்கள்.

இந்த தடுப்பூசி அவர்களின் உடல்நிலையை மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர்.

எனினும் இந்த தவறான பயத்தை போக்க வேண்டும். அத்தகையவர்கள் கொரோனா நோயிலிருந்து மரணத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.