சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சீனி இறக்குமதிக்கு அனுமதி அளிக்காவிட்டால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் குறைத்துவிட்டு தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

அதன்விளைவாக சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது

அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி கையிருப்பு எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானதாக உள்ளது.

அத்துடன் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனி தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும்.

இந்நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.