ஜனாதிபதி மற்றும் ஐ.நா சபை பொதுச் செயலாளருடனான சந்திப்பு நியூயோர்க் நகரில்!

ஜனாதிபதி மற்றும் ஐ.நா சபை பொதுச் செயலாளருடனான சந்திப்பு நியூயோர்க் நகரில்!

ஐ. நா சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ. நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பானது ஐ. நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐ. நா சபை தனது முழு ஆதரவை வழங்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் ஜனாதிபதியிடம்  தெரிவித்துள்ளார்.

ஐ. நா சபையின் தலைமையகத்திற்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிறப்பான வரவேற்பை ஐநா பொதுச் செயலாளர் வழங்கியுள்ளார்.

மேலும் 1978 இல் அகில நாடாளுமன்ற சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகைதந்தமையையும் அவர் நினைவு கூர்ந்தார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்தபோது அவர் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடக பிரிவின் ஃபேஸ்புக் பதிவு

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் உறுதியளித்தேன். ஐ.நா சபையின்...

Posted by கோட்டாபய ராஜபக்‌ஷ on Monday, 20 September 2021Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.