வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் தீர்மானங்கள்!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் தீர்மானங்கள்!

அடுத்த வருடமும் இந்த வருடம் போன்றே வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்சார கார்களை ஊக்குவிப்பதற்கும் தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு இன்னமும் இரண்டு மாத காலப்பகுதிகளே உள்ளன. இதனால் வரவு செலவு திட்டம் தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போதே வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் “உற்பத்தி பொருளாதாரம்” என்ற தலைப்பில் பொருளாதார இலக்குகளை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

அது தவிர, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும், இந்த ஆண்டை போன்று முடிந்தவரை இறக்குமதிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக பெரிய அளவிலான காணிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதே வரவு செலவு திட்டத்தின் முக்கிய நோக்கமாக காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.