கொரோனா ஒழிப்பு குழுவில் இருந்து மேலும் ஒரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா!

கொரோனா ஒழிப்பு குழுவில் இருந்து மேலும் ஒரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா!

கொரோனா ஒடுக்கும் தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பதவியை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் இக்குழுவில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் குழுவுக்கு தன்னால் பயன் இல்லை என்று நினைப்பதினால் தான் ராஜினாமா செய்ததாகவும், அவர் மயக்க மருந்து சங்கத்தின் தலைவராகவும், ஒன்றரை வருடங்களாக குழுவில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறினார்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அறிவியல் அடிப்படையின்றி தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆகியோரது முடிவெடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.