
அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், மூன்றாவது தடுப்பூசியானது எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.