சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கு புதிய சட்டம்!

சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கு புதிய சட்டம்!

தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சந்தையில் பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு தரமான தேங்காய் எண்ணெயை வழங்கும் நோக்கத்தில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டதாக அதன் செயலாக்க மேம்பாட்டு இயக்குனர் டி. எதிரிமான்ன தெரிவித்தார்.

தேங்காய் அபிவிருத்தி அதிகார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நட்சத்திர சின்னத்துடன் தொகுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்வதன் மூலம், தரமான தேங்காய் எண்ணெயை நுகர்வதில் நம்பிக்கையைப் பெற முடியும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து சமீபத்தில் நாட்டில் அதிகம் பேசப்படுகிறது.

அதன்படி, தரமான தேங்காய் எண்ணெயை அடையாளம் காண ஐந்து நட்சத்திரங்களை கொண்ட சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.