விடுதலைப்புலிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!!

விடுதலைப்புலிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!!


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தமது 85 வயதில் காலமானார்.


நீண்ட காலமாக சுகயீனம் அடைந்திருந்த அவர் இன்று (05) காலமானார்.


1936ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி பிறந்த அவர், அஞ்சல் அதிபராக பல்வேறு மாகாணங்களிலும் செயற்பட்டிருந்தார்.


பின்னர், 1994 ஆம் ஆண்டு அஞ்சல் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்தார்.


இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 07ஆம் திகதி ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.