
வர்த்தக வங்கிகளின் டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட 360 மெற்றிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆரிய பால் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த பால்மா கையிருப்பு காலாவதியாக வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பால்மா கையிருப்பை வெளியிடுவதற்கு தலையிட வேண்டும் என்று கோரிக்கை சங்கம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.