நாட்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி? இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி? இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்!


நாட்டில் வாகன இறக்குமதிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 


இணையவழி கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இதன்படி, வெளிநாட்டு இருப்பினை தொடர்ந்தும் பேணி வருவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.


அதேநேரம், வாகன இறக்குமதிகளின் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் நீடிப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். 


எனினும், முழுமையாக அனுமதிப்பதால் பாரிய சிக்கல் நிலையினை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.


எனவே சில கட்டங்களின் ஊடாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.