
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் இன்று (26) இரவு 7.00 மணி முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.