பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

சுகாதார தரப்பினர் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு மற்றும் மக்களின் ஒத்துழைப்பினால் கொவிட் அபாய நிலைமை ஓரளவிற்கு குறைவடைந்துள்ளது.


இந்த நிலைமை சீர்குலைக்கும் வகையில் கொவிட் பரவலுக்கு இடமளிக்கும் எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று சகலரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொவிட் அபாயத்தை நீக்குவதற்காக இதுவரையில் சகலரும் செய்த அர்ப்பணிப்புக்களை பிரயோசனமற்றதாக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடையாமல் இருப்பதற்கு சகலரதும் ஒத்துழைப்புக்கள் அவசியமாகும். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பொது சந்தைகள், மீன்பிடி பிரதேசங்கள் உள்ளிட்டவையே அதிக ஆபத்துடையவையாகக் காணப்படுகின்றன.


எனவே இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும். பொது போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பிலும் எமது பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.