தென் மாகாண பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு!

தென் மாகாண பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு!


தென் மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.


வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடவும், பிரச்சனைகளை கண்டறிந்து தென் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும் கொரோனா ஒழிப்பு செயலணியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


06ஆம் திகதி முதல் பாடசாலைகளைச் சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் குழு திட்டமிட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளிடமிருந்து தேவையான உதவிகள் பெறப்படும் என்று நம்பப்படுகிறது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.