பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி இரவு விமான நிலையத்திற்கு கிடைத்துள்ள மின்னஞ்சல் செய்தியையடுத்து இரண்டு சர்வதேச விமான நிலையங்களினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கிணங்க விமான நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளில் விமானப்படையினர், விசேட பொலிஸ் குழு மற்றும் பொலிஸ் விசேட செயலணியினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஐ.எஸ். ஐ.எஸ் மற்றும் தலிபான் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் அனைத்து புலனாய்வுப் பிரிவுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.