உடல் உபாதைக்கு உள்ளான நிலையில் நேற்றிரவு (14) மேற்கொள்ளப்பட்ட ஸ்கேனில் குசல் ஜனித் பெரேராவின் காலில் ஒரு சிறிய தசை இழுப்பு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் ஸ்கேன் முடிவுகள் சில நேரத்துக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் வரவிருக்கும் ஓமான் தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை விளையாட குசல் ஜனித் பெரேரா மருத்துவ தகுதியுடன் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.