திடீரென ஓய்வை அறிவித்தார் மொய்ன் அலி… காரணம் என்ன தெரியுமா…?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திடீரென ஓய்வை அறிவித்தார் மொய்ன் அலி… காரணம் என்ன தெரியுமா…?

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மொயின் அலி டெஸ்ட் தொடரிலிருந்து இன்று (27-09-2021) ஓய்வு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர்கள் என்ற வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் மோயின் அலி இதுவரை டெஸ்ட் தொடரில் 195 விக்கெட்களையும் 2914 ரன்களையும் அடித்து பலமுறை இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்திருக்கிறார்.

இன்னும் ஒரு டெஸ்ட் தொடரில் பங்கேற்றால் கூட 200 விக்கெட்களையும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் அடிக்க வாய்ப்பு இருந்தபோதும் மோயின் அலி டெஸ்ட் தொடரில் ஓய்வு. அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

இங்கிலாந்து அணிக்காக மூன்றுவிதமான தொடர்களிலும் மிக சிறந்த முறையில் விளையாடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மோயின் அலி தனது ஓய்வு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது, எனக்கு தற்பொழுது 34 வயதாகிறது என்னால் முடிந்த வரை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டேன், டெஸ்ட் போட்டி கிரிக்கெட் போட்டியின் மிகவும் பழமையான தொடராகும் மேலும் அற்புதமான தொடரும் கூட, அதில் சிறப்பாக செயல்பட்டது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

மேலும் உலகின் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக மிக சிறந்த முறையில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது குறிப்பாக எனது பந்துவீச்சின் மூலம் எப்பேர்பட்ட வீரராக இருந்தாலும் வீழ்த்த முடியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது இதுவரை நான் என்ன செய்தேனோ அந்த மகிழ்ச்சி மற்றும் நினைவோடு விடைபெறுகிறேன் என்று மொயின் அலி தெரிவித்தார்.

மொயின் அலி டெஸ்ட் தொடரில் இதுவரை 5 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் இதுவரை ஐந்து முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும் மோயின் அலி தற்பொழுது துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.