கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பி.சி.ஆர் பரிசோதனை கூடம் - வெடித்தது சர்ச்சை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பி.சி.ஆர் பரிசோதனை கூடம் - வெடித்தது சர்ச்சை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பி.சி.ஆர் பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

விமான பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் 3 மணித்தியாலங்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் எனவும், இது நாட்டுக்கு வருகைதருவோருக்கு செலவுகளை குறைக்கவும், சிரமங்களை கட்டுப்படுத்தவும் உதவும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.