ஆப்கான் அரசு அந்நாட்டு பெண்களுக்கு மேலுமொரு ஒரு தடையை விதித்தது!

ஆப்கான் அரசு அந்நாட்டு பெண்களுக்கு மேலுமொரு ஒரு தடையை விதித்தது!


ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே அங்கு பிரதமர், துணை பிரதமர், இராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையே தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.


விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை. கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றார்.


நாங்களும் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம். மேலும் ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அஹ்மதுல்லா வாசிக் தெரிவித்துள்ளார்.


https://www.theguardian.com/world/2021/sep/08/afghan-women-to-be-banned-from-playing-sport-taliban-say


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.